பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மூத்தோர்…

வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்…
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும் முதுமை
தாங்கிடும் நிலைகுன்றி தள்ளாடும் வறுமை

ஏங்கிடும் விழிக்குள் எத்தனை கனவு
ஒய்வற்ற கடிகாரம் போல் சுழன்றது நினைவு
அன்பாய் பாசமாய் அரவணைத்த ஆற்றல்
அகிலத்தின் வேர்களாய் அர்ப்பணித்த நாட்கள்

முகவரி பதித்தவர் முழுவித்தகம் நிறைத்தவர்
தளர்விலே இன்று தள்ளாடி வீழ்கிறார்
அறுவடை நாற்றுகள் ஆயிரம் ஏரிகள்
சேவையின் செம்மல்கள் செவ்வழி ஆசான்கள்

வித்தகம் நிறைத்தவர் வியூகங்கள் படைத்தவர்
வாழ்விலே எழுதிய வண்ணங்கள் ஒளிருது

இயலாமை வாட்டுது இடர்களே தொடருது
உடுக்கைஇழந்தவன் கைபோலே
இடுக்கண்களைவதே -மனிதத்தின்வேலி

Author: