நலமெனும் செல்வம்

ஜெயம்

கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல் மெதுவாக வரும்
விருந்தினராய் உடலின் வாசலைத் தட்டும்

அமைதியான எதிரியாய் பாங்காக வந்து
சீவன் தங்குமிடத்தின் அமைதியை குலைக்கும்
சிரித்த முகம் சோர்ந்து போகும்
வலி வாய்திறந்து வலிமையுடன் பேசும்

செல்வத்தை விட நலம்தான் பெரிதென
பணம் குவித்த வாழ்க்கையும் உணரும்
அன்பான கரங்களின் அரவணைப்பே தேவைப்படும்
ஆறுதலான வார்த்தைகள் வருத்தத்திற்கு மருந்தாகும்

அவசரம் இப்போதுதான் அமைதியாக மாறும்
சின்னசின்ன மகிழ்சிகளின் மதிப்பும் தெரியும்

18-03-2026

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading