தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சக்திதாசன்

தித்திக்கும் சுவை கொண்டு
எத்திக்கும் சிறந்திருக்கும்
முத்திக்கு அப்பாலும் வாழும்
நித்திய மொழி தமிழென்பேன்

மோதி நெஞ்சில் துயரம்
மீறி நிற்கும் வேளைகளில்
கூடி நாலு சொற் கூட்டி கவிதை
பாடி முடித்தால் அமைதியங்கே

எங்கு நான் என்று பிறந்தாலும்
அன்று ஒரு தமிழ்த்தாயில் கருவாக
மீண்டும் உருவாக வேண்டுமென்று
வேண்டி நிற்கும் பொழுதிதுவே

தாய்மொழியின் பெருமையினை நானும்
கண்டு கொண்ட பொழுது தன்னில்
பாதி வாழ்வு முடிந்து போயிற்று என
பாழும் மனது வாடுது இன்று

சிந்தனை எனும் ஊற்றில் ஊறும்
விந்தைகள் நிறைந்த தமிழில்
முந்தைய வாழ்வின் நிகழ்வால்
பிந்தைய அனுபவப் பிதற்றல்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading