கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மகிழ்வும் தொலைந்து கவலை வருமே (758) 16.04.2026

செல்வி நித்தியானந்தன்
மகிழ்வும் தொலைந்து கவலை வருமே

சித்திரை வந்தாலே மனதுக்கு மகிழ்வு
முத்திரை பதித்ததுபோல வருடம் வந்திடும்
எத்தரை வந்தாலும் தவித்திடும் ஒருபுறம்
எண்ணியே நாமும் ஏக்கமும் சேர்ந்திடும்

சொந்தமும் இல்லா தனித்த எம்பயணம்
சுற்றமும் இல்லா சீரிய தொடராம்
நாற்புறமும் சிதறிய கூட்டமாய் நானும்
நாடியே செல்ல உறவும் இல்லையே

அதிகாலை எழுந்து சந்தோசம் கலைந்திட
அடடா வாழ்க்கை இப்படி நிலையோ
ஆலயம் செல்ல ஆட்களும் இல்லை
அன்பாய் கதைக்க யாருமே இல்லையே

தாயக மண்ணில் தனித்துவ மகிழ்வு
உறவுகள் இணைந்து கூடியே இணைவு
உணவுப் பண்டங்கள் பரிமாற்ற நிகழ்வு
உலமே மறந்து உவகையில் நிறைவு

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading