சக்தி சக்திதாசன்

கட்டாந்தரையை விளைநிலமாக்கி
எட்டாதினியிங்கு பசியெமக்கென
தொட்டதெல்லாம் பொன்னாக்கி
ஈட்டியதவர் ஆற்றல்களென்பேன்

வறுமையில் உழன்றவர்
வாட்டத்தில் வாழ்ந்தாலும்
கல்வியில் சிறந்தவர்களாய்
களவெற்றிகண்டோர் ஆற்றல்களே !

முதலாம்உலகு தாமெனவே
முழங்கிடுவோர் மத்தியில்
மூன்றாம்உலகாய் இருந்து
முதன்மையடைந்தது ஆற்றலே !

எத்தனைமுறை வீழ்ந்தோம்
என்பதல்ல முக்கியமிங்கு
அத்தனைமுறையும் எழுந்தோம்
என்பதவர் ஆற்றல்களே !

ஆற்றலெனும் சக்திகொண்டு
ஆக்கிடும் நம்பிக்கையோடுப்
வாழ்ந்திடுவீர் அன்புச்சோதரரே
வெற்றியன்றி வேறில்லையுமக்கு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading