வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு இனிமைகள் காண
முத்திரை பதிக்கும் சித்திரையே வந்துவிட்டாய்!!

காதோரம் கேட்கும் செய்திகள்
கணணி யுகத்தின் வன்முறையாய் மோதல்
எங்கு கேட்டாலும் போரும் பொழுதும்
வேரும் மக்களும் வெடித்தெழும் வன்மம்

சாதி வேறுபாடு சமயச் சண்டை
நீதியற்ற வாழ்வும் நிலைத்திட்டு
கற்பழிப்பு என்றும் வன்முறை யென்றும்
நிலைத்திடும் வாழ்வு சீரற்று இன்று

பொல்லாத போதையும் நிலையற்ற வாழ்வும்
இல்லாது மனிதரை கொன்றே செல்லும்
மதிகெட்ட வாழ்வில் மாண்புகள் இல்லை
பதியெங்கும் அவலக்குரல் பார்க்கும் வன்மமாய்!!

நகுலா சிவநாதன் 1851

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading