வரமானதோ வயோதிபம்
வரமானதோ வயோதிபம் 53
சக்தி சங்கர்
இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பெண்ணே
**************
எண்சீர் விருத்தம்
———————————
சீர் வரையறை: காய் மா காய் மா/ காய் மா காய் மா
பாரதியின் கனவே பாரினிலே கண்ணே
பாசத்தின் ஊற்றே பாவையவள் தானே
வீரமுடன் நடந்து வீறுநடை போடு
விடுதலையை விரும்பு வீட்டினிலே முதலில்
சாரதியும் நீயே சாய்ந்திடாத குன்றே
சாதனைகள் புரிவாய் சங்கடங்கள் வரினும்
ஆரவாரம் இன்றி ஆளுமையை வளர்ப்பாய்
அகிலத்தை ஆள்வாய் ஆரணங்கே வாழ்க!
நயம்படவே உரைப்பாய் நல்லவளாய் வாழ்வாய்
நானிலத்தில் என்றும் நறுமணமும் வீசு
கயவர்கள் கொடுமை கண்டாலே பொங்கு
கற்பினையே காத்து கண்ணகியாய் மிளிர்வாய்
உயரத்தைத் தொடுவாய்
உந்துசக்தி ஆவாய்
உன்னாலே தானே உருவான துலகம்
புயலெனவே வீசிப் பூட்டினையே உடைப்பாய்
புதுமைகளைப் படைப்பாய் புதுயுகமும் காண்பாய்!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்!
கூட இருந்து ஆய்வு செய்யும் மதிமகன் அவர்கட்கும் மிக்க நன்றி!
திரு.திருமதி நடா மோகன் அவர்கட்கும்
மிகுந்த நன்றி!
நன்றி வணக்கம்!
