அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா அறிவுக்கு இதுவொரு விருந்து அறியாமையை நீக்கிடும் அருமருந்து புத்தியை எட்டவைக்கும் பெட்டகம் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் வாசித்தால்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவிதாதலைப்பு
வழிகாட்டியவர்கள்
***********************
வரமெனவே வந்தவர்கள் வழிகாட்டி ஆனவர்கள்
கரம்பிடித்து எம்மைக் கண்காணித்து நடத்தியவர்கள்
தரமுயரந்து நாம்நிற்கத் தலையாய கடமைசெய்து
சிரமமும்தான் பாராதெமைச் சிந்தையில் இருத்தியவர்கள்
உரமூட்டி உயர்த்திட உறுதுணையொடு இருந்தவர்கள்
அரமாக இருந்தெம்மை அனுதினமும் தீட்டியவர்கள்
குருவாகக் பணிசெய்து குன்றினிலே ஏற்றியவர்கள்
உருவாக்கி ஆளாக்கிய உன்னதர்கள் ஆசான்கள்
எங்கள் கேலிகள் எவ்வளவு பொறுத்தார்கள்
தங்கள் வாழ்வினில் தன்னலம் இன்றியே
சிற்பியைப்போல் செதுக்கியவர்கள் சிந்தையில் இருத்துவோம்
அற்புத ஆசான்களை அகத்தினில் வணங்குவோம்!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
திரு திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.
அனைத்துக் கவிப்படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan