கணப்பொழுதில்
கணப்பொழுதில்
சக்தி சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம்
திரு.நடா மோகன் அவர்களே!
திரு.ப.வை.ஜெயபாலன் அவர்களே!
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
அன்பே ஆளும் சக்தியாகும்!
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: மா மா காய்/ மா மா காய்
கீற்றுப் போல மிளிர்வாரே
கிழக்கில் உதிக்கும் சூரியன்போல்
தேற்றிக் கொள்ளல் வேண்டுமன்றோ
தேசம் காத்தல் நம்கடமை
ஆற்றல் உண்டு பாசமுடன்
அருகில் சென்று ஆற்றிடவே
ஊற்றாய் இதயம் இருக்கணுமே
உண்மை அன்பில் நிலைக்கணுமே!
பகிர்வோம் அன்பை மன்னுயிர்க்கே
பண்பில் உயர்ந்தே வாழ்ந்திடுவோம்
சகிப்புத் தன்மை கொண்டிடுவோம்
சமமே எல்லா உயிர்களுமே
மகிமை தானே மாந்தருக்கே
மண்ணில் பெருமை அடைந்திடலாம்
அகிலம் எங்கும் சமரசமே
அன்பே ஆளும் சக்தியாகும்!
ப.வை.அண்ணா உங்கள் பணி போற்றுதற்குரியது.
மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே களம் தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!
நன்றி வணக்கம்!
