சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

ஒளியின்றி ஒளிர்வெங்கு…

ஒளியான தேசமதை இருட்டி வைத்தது யாரோ…
காலத்தின் கண்ணாடி காட்டுமதன் சாயலை…
நிலம் தளம் களமான கதையாதோ….
பேச்சும் வீச்சும் தமிழ் மூச்சின் முடக்கம்…
என்னசொல்ல எதுசெய்ய இன்னுமாக வகையுண்டோ
வழியுண்டோ….
காலம் மாறும் கருத்தும் மாறும்…
காத்திருந்து காத்திருந்து காலத்தின் கோலம் ஞாலத்தில் அவலம்…
ஆக்கிவைத்த கடுமையின் கொடுமையை
எண்ணற்ற பக்கங்களாக
எழுதிய கண்ணீர் கதை புரட்டிய புரட்சிதான் மாறுமா…
வேட்கையும் தாகமும் போராட்ட தீக்குளிப்பும் அடுத்த தலைமுறைக்கான சேமிப்பா….
தொடக்கமும் முடிவும் தவறின் கொடுமை….
அவலங்களான
தேக்கம் ….மீறிப்பாயும் ஊழல்…..
மிரட்டும் கணங்கள்…விரட்டும் ஓலங்கள்…..கரைபுரண்டு முட்டிமோதும் துயர அலைகள்.
…துவளும் உறவுகள்…அழியாத வடுக்கள்…
அணையா தீபங்கள் ….

– சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading