தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சிவதர்சனி இரா

கைக்குள் கையாய்க் கைத்தொலைபேசி…!

கைக்குள் கையாய்
மெய்க்குள் மெய்யாய்
ஐயம் தெளிவுற மெல்ல
அகப்பட்டது இக்கருவி..
குருவி போல் அளவாய்
குவலயத்தின் பயனாய்
நிறைந்தது வாழ்வில்
இதுவன்றி இல்லை வாழ்வு..
பிரிவென்பது இல்லை
விரிகின்றது இதன் பயன்
முடிவிலி அற்ற போக்கு
முயன்றாலும் பிரியாத நோக்கு..
குழந்தைகள் முதல் மூத்தோர்
கைக்குள் கையாய் இதுவாம்
ஐயம் இங்கில்லை
ஐக்கியப் பட்ட போக்காம்..
விஞ்ஞானத்தின் கொடையாய்
விரிகிறது இதன் பயன்
தவறெனக்கண்டோரும் இங்கே
தவறாது இதைத் தொட்டார்…
முதலையின் வாலைத் தான்
பிடித்தது போலும்
மூச்சு நிற்கும் வரை இதை
விடுவாரும் இங்கில்லை..
சிவதர்சனி இராகவன்
1/2/2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் புதிருக்குள் புதிர் போட்டாலே அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை கேட்டதும் போட்டானே ஒரு...

    Continue reading