புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவரஞ்சனி கலைச்செல்வன்

“நடிப்பு”
பாத்திரம் ஒன்றினை ஏற்று
பலரசம் நடிப்பில் காட்டி
நேர்திறனாக எம் நெஞ்சில்
நிதம் நிலையான சிவாஜி.
பாராசக்தி மூலம் அறிமுகம்
படத்தை பார்த்தால் பரவசம்
பாங்காய் படைப்பார் நவரசம்
பதிந்தார் நெஞ்சில் நிரந்தரம்
பானா வரிசையில் பந்துலு
பயன் தரும் புராண படங்களில்
தானே இயக்கும் நாகராசர்
கூட்டில் வந்த படங்களில்
கொள்ளை கொண்டார் மனங்களை
பாசமலரில் அண்ணையாய்
பாங்கான அப்பர் சுவாமியாய்
ராசாதி ராஜ மன்னனாய்
கொடையில் வல்ல கர்னனாய்
நவராத்திரியில் நவரசம்
தேவர்மகனில் திறம் திறம்
கட்டப் பொம்மன் கப்பல் தமிழன்
இப்புவி உள்ள காலம்வரை
இவரை நடிப்பில் வென்றிட
இனி ஒருபோதும் பிறந்திடார்
சிவாஜியான கணேசனால்
சிறந்தது தமிழ் கலை உலகமே
நடிப்பில் வல்லார் ஒருவரே
நடிகர் திலகமாய் ஆனவரே!
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading