சிவரஞ்சினி கலைச்செல்வன்

நினைவு நாள் சிவரஞ்சினி கலைச்செல்வன். காதல் கனியும் பருவத்தில்
கனவுக் கோட்டை இதயத்தில்
மோகன கனவு மனதுக்குள்
முளைக்கும் இளமை பருவத்தில்
நேயம் தமிழ் மீது உந்த
நெஞ்சில் வைரம் நிமிர்ந்தாட
தாகம் தமிழ் மண் விடுதலையில்
தண்ணீர் தேட சமர் களத்தில்
சாதல் கூடும் என்றறிந்தும்
சாதிப்பதுவே குறியாக
மோதும் யுத்த முனையினிலே
முனைப்பு எதிர்பை முறிப்பதுவே
ஏதும் கேட்டு கேள்வியின்றி
எட்டும் கட்டளை நிறைவேற்ற
சாவை அணைத்த வீரர்களே
சரித்திர மானீர் சாதனையே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading