சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு231-

பாலை நிலமாக பழைய காலம்-பின்
பசுமை நிலமானதாம் உழைப்பால் யாழ்ப்பாணம்..

ஆழக்கிணறு வெட்டி பின்
ஆழ்துளை குழாய் கிணறு வைத்து
வாழ தொடர்ந்து உழைத்து
வளம் கண்ட யாழ்ப்பாணம்.
படிப்பு,உழைப்பு,பண்பாடு
கூட்டுறவு
எடுத்த காரியம் முடிப்பு
எங்கும் முயற்சி துடிப்பு.
எங்கே போனது எல்லாம்
எதையும் காணோமே
சோம்பல்,சொகுசு தேடல்
காசை கரைப்பதில் வீறு
வாள் வெட்டு,கொள்ளை
வழிப்பறி,கல்வியும் பாழ்
ஆளை ஆள் நம்பாத அடிதடி
காணி பிடிப்பு,கற்பழிப்பு
வன்முறை,வீதி தொறும் தினம்
விபத்து,
சாபமோ,கேடோ,
உள்ள ஆழ் ஊற்று எல்லாம்
காவி படிவு
மழை இல்லா வரட்சி
மீண்டும் பாலை நிலமாகுதோ
யாழ்ப்பாணம்
போர் போர் என்றோம்
இன்றோ ஆள் இல்லா வீடுகள்
அடியார் இல்லா கோயில்கள்
பண்பில்லாத நடத்தைகள்
பாழாகுது யாழ்ப்பாணம்

-சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading