அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_151
“பாமுகம் வாழி”
லண்டன் தமிழ் வானொலியே
காற்றில் கலந்தாய்
காதோரம் செய்தி சொன்னாய்
பரிணாம வளர்ச்சி கண்டாய்!
முதல் ஒலியாய்
முத்தமிழாய்
முன் நகர்ந்தாய்
முதல் மேடை நாம் கண்டது
செங்காளன்
2004
வான்பரப்பில் பறந்து
வானொலியாய் நின்று!
மழலையை
மகிழ்வித்தாய்
இளையவரை ஊக்குவித்தாய்
பெற்றோருக்கும்
உற்றவர்களுக்கும்
ஊன்று கோலாய் ஊர்ந்து சென்றாய்!
எழுதிதால் உயர்ந்தோம்
ஏற்றங்கள் கண்டோம்!
மழலை இளைய தலைமுறை
பெற்றவர் எம்மை
தொழில் நுட்பகருவியை கையாழவும்
மெய்யாழவும்
கற்றுத் தந்தாய்
கற்றதும் பெற்றதும் தான் அதிகம்!
பாமுகமாய்
பரிணமித்தாய் பார்ரெங்கும்
ஆளில்லாத விமானமாய்
ஆடல் பாடல் போடுகின்றாய்
இணைய வலைதளமாய் இயங்குகின்றாய்!
நீ வாழி
உன் புகழ் வாழி
உன்னை மிஞ்ச யாரும் இல்லை
உனக்கு இணை ஏதும்
இல்லை!
அற்புதமான மனிதன் நீ
ஊற்றெடுக்கும் அருவி நீ
நதி போல் ஓடுகின்றாய்
துணைவி தூணாக நின்று உயர்ந்தவன் நீ
தத்துவ ஞானி
நித்திய சிலி
சிரித்தபடி அரவணைப்பவளும் நீ!
நீ நீடுடி வாழ்க
நின் புகழ் நித்தமும் ஓங்க!
நீ வாழி
நின் புகழ் வாழி!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
08.06.24
