சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம்_150

“பெண்ணே”

பெண்ணே என் கண்ணே
கண் மணியே முத்தே
மரகதமே மாணிக்கமே
மாதவம் செய்து பெத்த என் சொத்தே!

பொறுமையை போர்வையால்
போத்தாய்
பொன்னான நேரத்தை
பொன்போல் எடுத்தாய்
வெற்றிக்கு உளைத்து வெற்றி கண்டாய்!

பெண்ணெய் கண்டால்
பேயும் இரங்கும்
பேரன்பு காட்டி புன்சிரிப்புடன் அரவணைக்கும்
பேராற்றல் கொண்டவளே!
பின் தூங்கி
முன் எழுவாள்
முதுகு வலித்தாலும்
முட்டி மோதி
முன்னோக்கி
ஓடுவாள்!

உன் பசி மறந்து
எம்பசி தீர்த்தாய்
நீ உறங்காமல்
எம்மை உறங்க வைத்தாய்
சுற்றும் உலகத்தில்
சுற்றும் தாய்
உனக்கு ஈடு
இணை ஏது பெண்ணே!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
03.06.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading