வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
சிவா சிவதர்சன்
[ வாரம் 267 ]
“வேள்வி”
என்றும் குறிக்கோளுடன் மக்களுக்காகஉயிர்நீத்தோர்
அரசனாயினும் ஆண்டியாயினும் தமிழர் நெஞ்சில் உயிர்வாழ்வார்
நானூற்றைம்பது ஆண்டுகளாய் ஒளிவீசும்வேள்வித்தீ
யாழ்ப்பாணஇராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலியன்
தமிழையும் சைவத்தையும் காத்த மாபெரும் சக்தி!
பறங்கியரின் ஊடுருவலைப் புறம்கண்ட மாபெருங்காட்டுத்தீ!
1519 முதல் 1561 ஆண்டுகள்வரை செங்கோலாட்சி
நண்பனாய் நடித்துக்காட்டிக்கொடுத்த காக்கைவன்னியன்
தமிழன்னையின் துகிலுரிந்தகாட்சிஇன்றும் தமிழுக்காய்
உயிரீகம்செய்யும்பல்லாயிரம் மாவீரர்களின்வழிகாட்டி
குடியைக்கெடுக்கும் கோடாரிக்காம்புகள் நம்மிடை இன்றும்
வாழ்வதே அன்னையின் அடிமை விலங்கின் சாட்சி
வைகாசிதோறும் புரட்டாசி அட்டமி திதியில் வரும்
சங்கிலியன்நினைவுநாள் பாடிடுவோம் பரணி
ஆண்ட பரம்பரை மீண்டும் அடையவேண்டும் ஆட்சி
அதுவரையில் அணைந்திடாது தமிழர்தம் சுதந்திரவேள்வித்தீ!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
