சிவா சிவதர்சன்

[ வாரம் 278 ]

“தேர்தல்”

நடக்குமாட்சி கசக்குமாட்சியாய் மாறிவிட்டதா?
நாட்டுக்கு ஆட்சி மாற்றம் அவசியமா?
மழையை நாடும் பயிராய் நல்லாட்சியை நாடும் மக்கள்!
குறைதீர்க்கும் குமரனாய் கைகொடுக்கும் தேர்தல்!

தேர்தலும் வாக்குரிமையும் ஜனநாயகத்தின் இருகண்கள்
மக்களே மக்களை ஆள உருவாக்கிய அரசியலில் வெற்றிப்படிகள்
பொறுப்புள்ள குடிமகனாய் தேர்தலை உபயோகித்தல் அவரவர்கடமை
பொய்வாக்குறுதிகளை நம்பி ஏமாறுதல் மடமையில் மடமை

தேர்தலின்றி பதவியேற்கும் அரசாங்கம் உலகிலெங்குமில்லை!
ஊழலின்றி நடந்து முடிந்ததேர்தலன்று எதுவுமில்லை
ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் எதுவானாலும்
முதலாய் முன்னனியில் பவனிவரும் தாயகத்திலும்

தேர்தலென்று வந்துவிட்டால் கொண்டாட்டக்களிப்பிலும்
எவரும் விஞ்சமுடியாது வாக்குச்சீட்டு அறுவடையிலும்
பணம் இருந்தால் எதையும் வாங்கமுடியும் என்பதிலும்
நிரூபித்துக்காட்டுகிறார்கள் தேர்தல்முடிவுகளிலும்

எழுபது ஆண்டுகளுக்கு மேலாய் பதவிதொடரும்
இனவாத அரசுகளின் மதியூகமா? அல்லது மக்கள் ஏமாளிகளா?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading