தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 230

“தலையீடு”

நன்மைகள்அருகி தீமைகள்மேலோங்க தலையீட்டும் பராசக்தியே
தவறானதலையீடுகளை இல்லாமலாக்கிடுவாய்
அன்னையே!
அறிவானபெற்றார்,நல்லாசான்,நல்ல நண்பர் அமைந்திடவைப்பாய்.
சொந்தங்கள் பெருகி துன்பங்கள் அகல சொல்லாமலே தலையீடுவாயே

பிறர்விடயத்தில் தலையிடுதல் சிலருக்கோ பொழுதுபோக்கு
தவறாயினும் தலையிட்டு வழிகாட்டல் உயர்குலப்பண்பதுவாம்
மாணவப்பருவத்து மாண்புடை நண்பர் சேர்க்கை வாழ்நாளை மகிழ்வூட்டும்
தவறானநட்பிலும், அரசியல் தொழிலிலும் அடிக்கடி தலையீடுகள்

ஆராயாமல் காலை விட்டவன் ஆபத்தில் சிக்குவது உறுதி
தளர்ந்து போன தாய் தந்தையர்கு தினமும் தனையரின் தலையீடு
பிறந்த மனிதனுக்கோ ஆயுள்வரை தலையீடு
நன்மை பயப்பதும் நாசம் விளைவிப்பதும் அவர் அவர் தலை எழுத்து.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading