கணப்பொழுதில்
கணப்பொழுதில்
சிவா சிவதர்சன்
வாரம் 173
“தொழிலாளி”
செய்யுந்தொழிலே தெய்வம் அதன் திறமைதான் நமது செல்வம்
தொழிலாளி சிறந்து வாழ வேண்டுமாயின் அவன் அடி வயிற்றை பசியென்னும் பேய் பற்றிப் பரவ வேண்டும்.
கையிலோ காசில்லை அவன் சட்டைப் பையில் ஓட்டையுமில்லை
பணம் இருந்தால் தானே கீழே விழும்?
சில நாட்களாகவே தொழில் தேடி அலைகின்றேன்.
கடைத் தெருக்கள் மக்கள் கூடுமிடங்கள் அலையத இடங்களில்லை
“வேலைக்கு ஆட்கள் தேவை” விளம்பரங்கள் எதையும்காணோம்
தலை சுற்ற சிறிது நேரம் நிழலில் அமர்ந்தேன்
கண்ணயர்ந்து விழித்தபோது அதிசயமோ அதிசயம்
துப்பரவுப்பணி! தினசரி கூலி 100/- அதிஷ்டம் அழைத்தது.
பாய்ந்து சென்று பெயர பதிந்தேன் தள்ளுவண்டியும் சவளும் தந்தனர்
பாய்நது பாய்ந்து குப்பைகளை ஒரு புறமாய் வாரி ஒதுக்கினேன்
மேற்பார்வையாளர் கருணையோடு என்னருகே வந்தார். நன்றாக் வேலை செய்கிறாய் சாப்பாட்டின் பின் மேலே வேலையை தொடர்வாய் என்றார்
கருணையோடு முதுகில் தட்டிக் கொடுத்தது போலிருந்தது .
முன்னனுபவமா?
அது வேண்டாம் கடும்பசியொன்றிருந்நால் போதும் அங்கே என் பசி வென்றது
அன்று முதல் இன்று வரை நானே முன்னணித் தொழிலாளி!
எல்லாமே பசி எனக்களித்த வரந்தானையா!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
