கணப்பொழுதில்
கணப்பொழுதில்
சிவா சிவதர்சன்
வாரம் 206
*புதிர்ப் பொங்கல்*
புதிதாய் விளைந்த நெல்லெடுத்து புதிர்ப்பொங்கல் கொண்டாடுவோம்
பதிவாய் வரலாற்றில் இருந்தகாலம் தைப்பொங்கல் கொண்டாடினோம்
முற்றிவிளைந்த வயலில் கதிர் கொய்து பொங்கி மகிழ்ந்த ஒருகாலம்
கைவிட்ட வயல்வெளிகள் கட்டாந்தரையாய் காட்சியளிக்குதே இக்காலம்.
தமிழன் ஆனைகட்டிப் போரடித்த தொரு பொற்காலம்
செல்லும் வழியெங்கும் செந்நெல் தலைசாய்ந்து வரவேற்கும் அக்காலம்
தானும் உண்டு தானமுஞ்செய்த தன்னிறைவு இன்று மறந்த காலம்
தரங்கெட்ட அரிசியேனும் இறக்குமதிசெய்து இரந்துண்டு வாழும் இக்காலம்
நாட் காட்டியில் தைப்பொங்கல் நாள் பகட்டாய்ப்பளபளக்கும்
புதிதெடுத்துண்ணும் புதிர்ப்பொங்கல் அது என அறியாது வாய்யிளக்கும்
பழமை மறந்து புதுமை வேட்கையில் நாகரீக உச்சியில் நிற்கும் நாம்
பாழும் வயிறு மட்டுமே பசியை மறக்கவில்லை புதிர்பொங்கலையும் கேட்கவில்லை.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
