சிவா சிவதர்சன்

[ வாரம் 254 ]
“பங்கு நீ”

தனிமரமாய் வாழ்ந்து வாழ்க்கையைத்தொலைத்தல் பரிதாபம்
தனிமையில் வாடி இன்பதுன்பங்களைப்பகிர முடியாத அவமானம்
தனிமையிலே இனிமைகாணமுடியாத பெருஞ்சோகம்
தாங்காத சுமையை இறக்கிவைத்து இளைப்பாற ஒரு சுமைதாங்கி அவசியம்

நல்லவேளை நாம் பிழைத்துக்கொண்டது பெரும் புண்ணியம்
இளமையில் கல்விபோல அழகிய காதலியும் வாய்த்தது எனது பாக்கியம்
என் வாழ்வின் பங்கு நீ உன்வாழ்வின் பாதிநான் என ஆனோம்
அழகான மனைவியாய் அன்பான துணையாய் இல்லறத்திலும் இணைந்தோம்

மாரிக்குளிர் நீங்கி வசந்தத்தின் வருகை கூறிநிற்கும் பங்குனி
காலங்களில் அவள் வசந்தம் என் இன்பவாழ்வின் பங்கு நீ
நான் வாழுங்காலம் முழுவதும் வீசுந்தென்றலாய் நீ
உன்னிதயத்தில் சரிபாதி எனக்கே தந்தாய் பங்கு நீ

உருவத்தால் இருவரானாலும் உள்ளத்தால் ஒருவரானோம்
மரணமொன்று வரும்,வந்தாலும் அழியாத காவியம் படைப்போம்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading