சிவா சிவதர்சன்

[ வாரம் 265 ]
“குருதிப்புனல்”

போராடிப்பெற்ற சுதந்திரமோ மா வரம்
அதில் தந்திரம் கலந்துவிட்டால் மிகஅனர்த்தம்
குருதிப்புனலில் மாவீரர் இன்னுயிரோ அமர்ப்பணம்
கொள்கை மாறா வேள்வியிலே யாவும் சமர்ப்பணம்

குருதிப்புனலில் நனைந்த நாடுகளுக்கு உதாரணம்
எங்கள் தாயகமும் அராபிய வளைகுடாவில் பலஸ்தீனமும்
சமாதானப்புறா இங்கு பறப்பது அசாதாரணம்
இசைந்து வாழும் விலங்குகளும் இடையே மூர்க்கமாய்ப்போராடும்

மோதிய களைதீர்ந்தபின் பகைமறந்து குலாவி மகிழும்
இவைகண்டும் திருந்தாத மானிடா! இனி என்றுன் குருதிப்புனல் தீரும்?
பரிணாம வளர்ச்சிகூட உனை அண்ட நாணும்
பல்லின மக்கள் வாழும் நாடுகள் உலகில் அநேகம்

இலங்கையில் மட்டுமேன் இந்தமாறா இனக்குரோதம்?
இயக்கரின் மரபணுக்களுக்கு உவந்ததா இரத்த வாசம்?
அன்புபோதிக்கும் பௌத்தம் இங்கே ஆடுது இரத்ததாண்டவம்.
அரசியல் நாடகம் நடாத்தும் ஆட்சியாளர் போடுகிறாரா இரட்டை வேடம்?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading