புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 28-04-2022
ஆக்கம் – 38
வேண்டும் வலிமை

அகக் கண் கொண்டு உலகைப் பார்க்கும்
அபூர்வ குழந்தைகள்
அன்பிற்கும் அரவணைப்பிற்கும்
ஏங்கித்தவிக்கும் குழந்தைகள்

காலம் முழுவதும் குழந்தை உள்ளத்தோடு
வாழும் குழந்தைகள்
நுண்ணறிவும் பன்முகத் திறமைகளும்
தன்னகத்தே கொண்ட குழந்தைகள்

சிறப்புக் குழந்தைகள் சீருடன் வாழவழி உருவாக்கவேண்டும்
சமூகமும் விழிப்புணர்வுடன் உதவ முன்வரவேண்டும்
வறுமையும் தனிமையம் நீங்கி நலமுடன் வாழ வேண்டும்
மேன்மையுடன் வாழ்தற்கு மனவலிமை பெற்றிடல் வேண்டும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
25-04-2022

Nada Mohan
Author: Nada Mohan