இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

புழுகு வெடி (392) 30.04.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி

சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே உலர்ந்தாலும்
ரோசாப்பூ வாசமுள்ளது

கூற்று எனும் பேச்சிலே
புலரும் பூக்கள் மட்டும்
வாய் நாறப் பொய்யும்
பிரட்டும் கூசாது உளற

வாய் பிதற்றும் பொய்யில்
உண்மை எதுவென்று
சொல்பவர்க்குத் தெரிந்தும்
பேய் மனம் ஏதேதோ
ஆதாயம் தேடுகிறது

கேட்பவர் காதில் பூச் சுற்றிப்
பழகிப் போனது அதுவோ
காலம் கடந்து கோலம்
கரைந்திடப் புழுகு வெடி
சுக்கல் சுக்கலாகிடுமே .

ராணி சம்பந்தர் ஜேர்மனி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading