கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

செல்வநாயகி தெய்ஙேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

நாதம்
“”””””
விளம் விளம் விளம் மா
விளம் விளம் விளம் மா

கனிவினைத் தந்திடும் கலைமகள் ஞானம்
கவினுறு பூங்குரல் கலைத்திடும் மௌனம்
தனிமையைப் போக்கியே தழுவிடும் தென்றல்
தனதெனும் ஓசையில் தளிர்களை ஆட்டும்
வனிதையர் மென்குரல் வறட்சியைப் போக்கும்
வளம்பெறும் நாதமும் வனப்பினைத் தேக்கும்!
இனித்திடும் ஓசையில் இறைவனின் கீதம்
இயற்கையில் தோன்றிய இசையெனும் நாதம்

குயிலதன் கூவலும் குருவிகள் பாட்டும்
குரல்வழி அன்பினை கொடுத்துய ரோட்டும்
மயிலதன் ஆடலில் மயங்கிடும் மேகம்
மழையுடன் மத்தளம் மகிழொலிக் கோசம்
பயிரிடை பாய்ந்திடும் பலவுயிர் ஓசை
பரப்பிடும் தூதினைப் பகிர்தலும் ஆசை
உயிர்களின் உள்நின்(று) உறங்கிடும் கீதம்
உலகியல் வாழ்க்கையில் உயர்ந்தநல் நாதம்!

அருவிகள் வீழ்தலில் அலைகளின் பாசை
அடுத்தடுத் ஆர்த்திடும் அவனிகொள் ஓசை
மருவிடும் ஓதுவார் மறைபுகல் வேதம்
மழலைகள் பேச்சிலும் மனமகிழ் கீதம்
இருமையும் பின்தொடர் இன்மொழித் தாயும்
இயலிசை நல்கிட இதயங்கள் தோயும்
உருகிட ஆழ்த்திடும் உயரிய பண்ணில்
உயிர்களும் ஓங்கிடும் உறவுகொள் நாதம்!

ஆக்கம் :-
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan