மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நிர்மூலம்

ஊரோடு ஓடிய
அவலம்
வேரோடு அழித்த
கோலம்
சீர்ரொடு வாழ்ந்த
பந்தம்
சின்னா பின்னாய்
சொந்தம்

விரும்பி உறவுகள்
காத்து
விழிமூடா வலிகளை
சுமந்து
வானமும் மழையாய்
பொழிந்து
மண்ணும் நிர்மூலம்
ஆனது

கொத்தாய் உயிரும்
அழிப்பு
கொலையாய் இதயத்
துடிப்பு
குருதியில் உடலும்
சிதைப்பு
இறுதியாய் ஆட்சி
அறிவிப்பு

கட்டிய கல்லறைகள்
மாயம்
களவாணிகள் செயலால்
காயம்
சிங்களம் மறந்ததா
நேயம்
சீற்றத்தால் அழித்த
நிர்மூலம்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading