அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
செ.தெய்வேந்திரமூர்த்தி
மூண்டதீ
“””””””””
எண்சீர் விருத்தம்
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் விளம் விளம்
என்னுளே மூண்டதீக்(கு) எனக்கொரு காரணம்
எவரையும் மதித்திடாச் செருக்கெனும் தீயதாம்
உன்னுளே மூண்டதீக்(கு) உனக்கொரு காரணம்
உன்மனம் அறியுமே
உள்ளதை உரையுமே
அன்பிலார் வைத்ததீ
அழிக்குமே உலகினை
ஆசையால் மூண்டதீ
ஆணவத் தெழுந்ததீ
இன்னலென் றேங்குவார்
இன்பமும் தொலைக்குமே
ஈனமாம் தீயதன்
இடுக்கினுள் வீழ்த்தியே!
மூண்டதே தீயிங்கு
முழுவதும் அழிக்குதே
மூச்சினுள் தங்கியே
முயற்சியைத் தடுக்குதே
தூண்டுதே துக்கத்தை
தூக்கமும் கலையவே
தொலைவிலே வாழ்க்கையும் தோரணம் ஆடுதே
தாண்டுவோர் தாண்டவும் வேண்டுவோர் வேண்டவும்
தந்தநேர் நாட்களைத்
தகிப்பதும் தீயதே
மீண்டுமோர் தீயெனில்
மீளுமோ உலகமும்
மிகைப்படு தீவலை
திரளுதே எதிரிலே
நாக்கிலும் தீயது
நர்த்தனம் ஆடிடும்
நகலென அசலையும்
நகர்த்திட வல்லதாய்
தாக்கியே கொன்றிடும்
தீக்குளே துடிப்பினும்
தன்னலம் பேணியே
தக்கவை செய்கலார்
போக்கெலாம் மாற்றுவார் பொய்மையால் உலகையே
பொம்மையாய் வாழ்வதைப் போற்றுவார் பூவிலே
தேக்கிடும் தீமைகள் தேடிவந் தழிப்பினும்
தெய்வமே என்றவர்
தீர்ப்பினை நல்குவார்!
இம்மெனும் முன்னமே
இரக்கமாய் நாடகம்
இன்னலென் றாகையில் இம்சையாய்த் தீயெழும்
அம்பலம் முன்னொரு
அரிதரம் அன்பென
அத்தனை தீயையும்
அன்பினால் மறைப்பரே
நம்முளே மூண்டதீ
நமக்கெலாம் காரணம்
நல்லவை போற்றிடார்
நாணமாம் சீதனம்
எம்மவர் தொட்டதீ
எதிரணி கால்களில்
எங்கணும் மூண்டதீ
ஏதிலார் வயிற்றிலே
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
