கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம் 10

கனவு தேசம்
கனவு தேசமது ஈழ தேசமிது
பலரிடம் கேட்டது உபதேசமிது
கண்டது யுத்த களமிது
காணவில்லை நியாமது
கனவாய் மலரும் பிரதேசமிது.

கோட்டுப் போட்ட விவசாயியும்
தந்தை கனவறிந்த நற் சேயும்.
பெற்றோர் மொழி கற்ற பிள்ளையும்.
பெரிய திலகமிட்ட பாட்டிகளும்,

தற்கொலை தகர்த்து
மன அழுத்தம் அற்று
பெண்ணடிமை தகர்த்து
பிறப்பில் பேதம் நீக்கி

மரங்களை நாட்டி
சுற்றாடல் பேணி
சுத்தமான சுகமான
ஒக்சிசனை சுவாசித்து,

கருகிப்போன ஈழத்தை
களனிவயல் ஆக்கி
அச்சத்தை அகற்றி
அடிமைத்தனத்தை விலக்கி
பிச்சையற்றோர் நாடாய்.

என் பிரதேசம் பிளவின்றி,
வாழும் தேசமாய்
எம் தேசம் வேண்டும்..
எம் கனவு தேசம் நனவாக
விலை என்ன வேண்டும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan