புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-18

23-11-2023

மாவீரரே

மாவீர மணிகளே!
மாதம் கார்த்திகை மலர்ந்தாலே நும்
ஈகை நினைவில்
கண்கள்
கருமேகமாய் தமிழர்
மனம் கலங்க
கண்ணீரும் பொழியுதே
மழையாய்!

மதங் கொண்ட கயவரால்
மாண்டனர் எம் மக்கள்
சிதைந்து போன உடல்கள்
சிதறிப் போன உறவுகள்
பள்ளியிழந்த சிறார்கள்
தொலைந்து போன கனவுகள்

குற்றுயிராய்க் கிடந்த தாயின்
மார்பில் பால் தேடும் மழலைகள்
கற்பிழந்த மங்கையர்
அங்கமிழந்த முதியவர்கள்
உன்னைப் பிரிந்த பெற்றோரும்
உடன் பிறப்பும்
நடைபிணமாய்
சித்தங் கலங்கி….!

கதறித் துடித்த எம் இனம்
கண்டு நீயும் கொண்டாய்
களமும் சென்றீர்
துள்ளி விளையாடும்
பள்ளிப் பருவத்தில்
கையில் துவக்கேந்தி
செங்களமாடிய
செல்வங்கள் நீவிர்.
அன்று நீவிர் பட்டதை
எந்த நாடும் கேட்கவில்லை
ஆண்டவனும் இரங்கவில்லை!

மண்ணிற்காய் தன்னுயிரை
மாய்த்த மாவீரரே
எம் இளம் சந்ததி கண்மூடி
கணனியில் உறங்காமல்
தாய் மண் பற்றுடனும் எம்
இன மொழியுடனும் வாழ்வரே!

எம் இன விடுதலைக்காய்
இன்உயிர் ஈந்த நும் கனவு
நனவாகும் நாள்
செங்காந்தளின் தீ சுவாலயாய்
நும் தியாகம்
சுடர் விடும்
விழுதாய் போன உங்களுக்காய்
காந்தள் மலர் கொண்டு
தொழுது நானும் மண்டியிடுகின்றேன்!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading