புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-41
18-06-2024

வசந்தம்

தேசம் முழுதும் பச்சை மரங்கள்
நேசம் கொண்ட நின் தமிழ் மனங்கள்
வாசம் கண்ட வண்ண மலர்கள்
பிரகாசம் கொண்டு கதிரவன் வருகை

புதிய துளிர்கள் மரங்களில் அரும்பும்.
பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சியில் கொட்டும்
தேனீக்களும் வண்டுகளும் மலர்களைத் தேடும்
மனங்களிலெல்லாம் புத்துணர்ச்சி பொங்கும்

வலிகளும், சோகங்களும் வலிந்தே
செல்லும்
இருண்ட மனங்களெல்லாம் குறைந்தே செல்லும்
இதயம் கொஞ்சம் இதமாய்த் தெரியும்
இது தானா வசந்தம் எனத் தோணும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan