ஜெயம் தங்கராஜா

சசிச

குருதிப்புணல்

கொத்துக் கொத்தாக நிலம்தெரியாது சடலங்கள்
குற்றுயிரோடு அவற்றிற்கிடையில் அனுங்கும் உடலங்கள்
காப்பாற்ற வந்தவரும் வீழ்கின்றார் குண்டடிபட்டு
கேட்பார் யாருமற்ற ஓரினமகக் கைவிடப்பட்டு

பேரழிவை ஏற்படுத்தியே ஓணாய்கள் கோசம்
கோரமுகங்கொண்ட அரக்கர்கள் செய்தாரே நாசம்
கழுகுகள் பசிக்கு குஞ்சுகளும் இரையாகிப்போயின
அழுதாலும் கதறினாலும் இயலாநிலை ஆயின

அப்பாவித் தமிழரை அழிப்பதுதான் வீரமா
இப்பாரும் பார்த்தும்பார்க்காது ஒதுங்கியதே ஓரமா
கேட்டுக்கேள்வின்றியே அநியாயம் எல்லை மீறியது
காட்டுமிராண்டிகளின் நோக்கம் நினைத்தபடி அரங்கேறியது

உலகம் எதற்காக மவுணம் காத்தது
விலகியே நின்று வேடிக்கையும் பாத்தது
அந்த இறைவனுக்குக்கூட இரங்கவில்லை மனம்
இந்த கொடூரங்களை மறந்திடுமா இனம்

ஜெயம்
10-05-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading