வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
ஜெயம் தங்கராஜா
கவி 618
விடுமுறை தரும் சுகம்
சற்று வேலைக்கு ஒரு கமா ,முற்றுப்புள்ளியல்ல
அடங்காத இயந்திரங்களின் பேரொலிகளிலிருந்து
செவிகளிற்கு தற்காலிக விடுமுறை
ஓய்வுநாளின் தயவால் உடல்வலிக்கு இடைவேளை
மகுடிக்கு அடங்கி பாம்பாய் ஆடியவன் மூடிய விழிகளை திறகின்றேன் உலகம் வேறானது
ஆகாயக்கோட்டை அரசனின் கடலுள் மூழ்கும் அழகை இரசிக்கின்றேன்
இரவில் நிலவின் ஒளிதீபத்தில் ஆள் மயக்கும் அழகுக்குள் கரைகின்றேன்
ஒரு சிறைவாசம் அனுபவித்தவன் விடுதலையடைந்ததை போல புலம்புகின்றேனா
வேலை தூண்டிலில் மாட்டிய மீன் நான் வேலை சிலவேளை வலையாகக்கூட மாறியுள்ளது
அழகான பூக்களின் தோட்டத்தை என்னால் தான் முட்காடானதா
எல்லோரும் தானே வேலை பார்க்கின்றார்கள் எதோ நான் மட்டும் வேலைசெய்வதைப்போல் பிதற்றுகின்றேனா
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதைப்போல்
பிடித்தாற்போல் வேலை அமைவதும் இறைவன் அளித்த வரம் அல்லவோ
முதல் வரம் நான் கேட்க்காமலே தானாகவே கிடைத்தது
இரண்டாவது, இரந்து வேண்டினினும் கிடைக்கப்பெறாதது
எனவே இந்த இடைவெளியை கோடு கிழித்து சந்தோசத்தை மறுபக்கம் தாண்டவிடாது அணுஅணுவாய் விடுப்பை கொண்டாடுகிறேன்
அழுத்த முடிச்சுக்களை அவிழ்க்கும் இரகசியத்தை தேடுகின்றேன்
இது தானாய் விழுந்த முடிச்சல்ல அதுவும் தெரியும்
மகிழ்ச்சிக்கான மந்திரத்தை அறிந்தவரை,அறிந்தவரை தேடுகின்றேன்
நேற்று இரவு கனவில் மனம் சொன்னது மகிச்சியின் ஆசான் தானென்று
ஜெயம்
17-08-2022
