புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

புழுதி வாரி எழும் மண் வாசம்..”

புழுதி வாரி எழும் மண் வாசம் உறங்கிக் கொண்ட உணர்வுகளை  மீட்டுதடா நண்பா
பொழுதுபட்ட பின்னரும் விளையாடுவோம் நினைவிலிருக்கின்றதா
பத்திச்சத்திற்கு குஞ்சி ஆச்சியிடம் கச்சான்சரை வாங்கிக் கொண்டு
அரைமதில் மேல் உட்கார்ந்து அரட்டையடித்து உண்போமே

புளியமரத்தடியினிலே அதன் வேரையொட்டி சின்ன வைரவர் கோயில்
கும்பிடத்தான் போனோமா புளியமரக் கிளை உலுக்கி பழம்பொறுக்கி உண்டோமா
மழைபெய்து வெள்ளம் நிற்கும் பக்கத்தில் வருவோர்கு காலால் தெத்தியே நனைப்போமே
அதற்கான சம்பளத்தை தாயிடம் கிளுவந்தடியால் பெறுவோமே

பூவரசம் மரமேறி  உடும்பு பிடித்து  விளையாட்டு எங்கள் தேசிய விளையாட்டு
வைரமான அந்தக்கிளைகளிலே தூங்கித்தூங்கி குரங்குகளையும் மிஞ்சினோமே
பூமணி அக்காவின் வேப்பமரத்து அணிலை கெற்றப்போளால் நீ அடிக்க
அது அவர் அண்ணன் சின்னமணியின் தலையைப் பதம்பார்க்க
எடுப்போமே ஓட்டம் அந்த சின்னமணி அண்ணரும் இப்போ இல்லை

கினற்றுக்குள் வலம்வரும் மாம்பழத் தும்பியை பிடிக்கப்போய் கிணற்றுக்குள் விழுந்தோமே
தீப்பெட்டிக்குள் பொன்வண்டைப் பிடித்து சிறைவைத்து மகிழ்ந்தோமே
பூக்களின் மேலே உட்காரும் வண்ணத்துப்பூச்சியை போட்டிபோட்டே பிடிப்போமே
வீட்டிலே காசை களவாயெடுத்து புளுட்டோ ரொவியும் பால்கோவாவுமென சுவைத்தோமே

கிளித்தட்டு நொண்டிச்சில்லு பாண்டி கிட்டிபொல்லு நேரம் போவதும் தெரியாது
குட்டுப்போடும் மலக்கியாஸ் மாஸ்டர் காதை திருகும் விக்ரர் மாஸ்டர்
மூங்கில் கம்பு சின்னப்பு மாஸ்டர்
விளையாட்டுப்புத்தி எத்தனை குட்டுக்கள் எத்தனை திருகல்கள் எத்தனை அடிகள்
ஜோண் மாஸ்டரும் மணி ரீச்சரும் காதலிப்பதை விழுந்து விழுந்து இரசிப்போமே

மண் புழுதிவாரியிறைக்க மண்வாசத்துடன் பாசமாய் நேசமாய் வாழ்ந்தோம்
சிறுவயது குறும்புகளும் கூழப்படிகளும் இன்றும் மறக்கவில்லை தோழா
சேர்த்துக்கொண்டோமே பல்லி முட்டைகளும் காக்கா முட்டைகளும்
வீட்டிற்குத் தெரியாமலே
மண் புழுதியுடன் பொழுதுகளை கழித்தே நிலத்தில் ஆடிய கோலத்துடன் ஓடியதே காலம்

ஜெயம்
21-02-2023

Nada Mohan
Author: Nada Mohan