தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : நினைப்பு அது நெருப்பு

நிலா முற்ற கொட்டில்
குழை சாத கவளம்
கை முந்தி முழுங்கும்
தொண்டைக்குள் தாகம்

செலவில்லாத வரவு
தலை வருடி வளர்த்த
தாய் இன்று இல்லை அவர்
தலை முறையின் உயிர்ப்பு
உயர்ந்து நிற்கும் நிலை காண

உறவுகளின் சபையில்
ஓரமான இருப்பு
ஓரக்கண்ணில் கசிந்த
ஈரமான நெருப்பு

சூழலோடு நகர்ந்து
சுமந்து கொண்ட படிப்பு
இலட்சியத்தை தொட்டு நிற்கும்
இன்பமான வீடு!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading