தடமது படைத்தெழும் தனித்துவம்

சர்வேஸ்வரி சிவருபன்

தடமது படைத்தெழும் தனித்துவம்

ஆகாய வீதியெங்கும் அலைவரிசை இசைந்துவர
ஆனந்தமாய் தனித்துவமாய் பாமுகம் பூத்திருக்க
காத்திரம் கொண்ட படைப்புக்கள் எத்தனையோ
தடமது படைத்தெழும் சாதனையும் நிறைந்ததங்கே
சரித்திரக் களமாக்கி படைப்புக்கள் தோன்றியங்கு
இருபத்தேழு அகவையிலே இன்முகமாய் வீசியுமே
தலமைத்துவம் தரனியிலே கால்பதித்து விளையாடி
தர்மசிந்தனைகள் தளராது விரிந்தாட

இறையருள் கூடிடவே இணைசேரும் மக்களுமே
தவறாத கடமையிலே நன்னெறியோடு களமாடி
என்றும் இயம்பட்டும் இலண்டன் வானொலி
காற்றலை சுழன்றுவர தேவகாணம் பரவட்டுமே
ஆ….ஆ….ஆ..கா…ஆ…கா

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading