தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தர்ஜினி சண்

இன்றும் என் காதில்
கேட்கும் அம்மா குரல்

அம்மாவின் குரலில்
என் பெயரே கானம்

கட்டுண்டு போவேன்
அவர் குரலில் என் பெயர்
அது தயாஆஆஆஆஆ❤️❤️❤️

வயிற்றில் நான் இருக்கும் போதே
அம்மா வைத்த பெயர் தயா….
அப்பா வாழ்ந்த காலம் வரை
அப்பா அம்மாவை அழைத்த
பெயரும் தயா…

பெயர் வைத்த பின்பும்
பெண் பிள்ளை தான் வேணும்…
என் முதல் பிள்ளை
பெண்ணாக வேண்டும்…

அம்மாவின் நட்ஷத்திரத்தில்
அவர் விருப்பம் போலே
அவர் ஆசை நிறைவேற
அவருக்கு மகளானேன்..

கருவறையில் எனை காத்து
கைகளில் ஏந்தியவர்…..
சுற்றுகின்ற பூமியில்
சுமைகள் பல தாங்கி…..
நிற்காமல் சுழல்கிறார்
நாளை இன்னும் உண்டென்று…

கடிகார முட்களை
கதையாக்கும் என் அம்மா
கடவுளுக்கு நிகராவார்
என் கண்களில் நிறைந்திடுவார்…

காலங்கள் கரைந்திட
கோலங்கள் மாறிட
கற்றிட்ட பாடங்களை
மொத்தமுமாய் உணர்ந்திடுவார்…

22.03.2023
18:24
தர்ஜினி சண்🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading