கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

தாய் தாயென ஒரு கவி

ஜெயம் தங்கராஜா

கவி 727

தாய் தாயென ஒரு கவி

பிறந்தாய் வளர்ந்தாய் படித்தாய் முடித்தாய்
உழைத்தாய் சம்பாதித்தாய் வாழ்ந்தாய் அனுபவித்தாய்
புதிதாய் புரிந்தாய் இசைந்தாய் இரசித்தாய்
பார்த்தாய் சந்தித்தாய் காதலித்தாய் மணந்தாய்

இனிதாய் நினைத்தாய் கரைந்தாய் மகிழ்ந்தாய்
எடுத்தாய் கொடுத்தாய் உனதாய் உச்சரித்தாய்
தொடுத்தாய் தொடர்ந்தாய் வாழ்விதாய் குதூகலித்தாய்
பெரிதாய் பிடித்துவிட்டதாய் அள்ளித்தருவதாய் வாழ்ந்திருந்தாய்

வரவதாய் வருவதாய் என்பதாய் கொக்கரித்தாய்
செலவழித்தாய் இழந்தாய் அழிந்தாய் தத்தளித்தாய்
விழுந்தாய் துன்பித்தாய் தனித்தாய் அழுதாய்
கோபித்தாய் முறைத்தாய் பெறாததாய் துடித்தாய்
பரிதவித்தாய் பதைபதைத்தாய் பட்டதாய் உணர்ந்தாய்
போனதாய் வாழ்வதாய் வீணதாய் பயந்தாய்

அலைந்தாய் களைத்தாய் நலிந்தாய் மெளனித்தாய்
குடித்தாய் வெறிதாய் நொடிந்தாய் உருக்குலைந்தாய்
சிறுத்தாய் கறுத்தாய் வலுவிழந்தாய் வளமிழந்தாய்
வராததாய் தராததாய் கைவிட்டதாய் உத்தரித்தாய்

முணுமுணுத்தாய் விரும்பாததாய் தருவதாய் திணிப்பதாய்
யோசித்தாய் விழித்தாய் அறிந்தாய் தெளிந்தாய்
அடிபணிந்தாய் தொழுதாய் பூசித்தாய் இரந்தாய்
தணிந்தாய் கனிந்தாய் மெய்யதாய் கையிலெடுத்தாய்
பண்பட்டதாய் மிளிர்ந்தாய் சரியானதாய் அடைந்தாய்

காற்றதாய் நெருப்பதாய் நீரதாய் நிறமதாய்
யாரதாய் இறைவனதாய் வானதாய் பூதமதாய்
நடந்ததாய் நடப்பதாய் நடக்கவிருப்பதாய் எவரதாய்
செய்வதாய் செயற்படுத்துவதாய் வலியதாய் விதியதாய்

ஜெயம்
29-05-2024

Nada Mohan
Author: Nada Mohan