அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

தியாகராஜா யேகேஸ்வரன் (ஓமானிலிருந்து).

கவிதை :
தியாகராஜா யேகேஸ்வரன் (ஓமானிலிருந்து).

நீர் ஆதாரமின்றி வாழ்வேதடா? சுகவாழ்விற்கு நன்னீர் தேவையன்றோ? கடல் நீர் ஆவியாகி மேகங்கள் ஆகாயத்தில் உலாவி, மோதி மின்னி முழங்கி, பூமி நனைந்து பெருக்கோட, கழிவுகள் கலந்து நீரோடை மாசாகி, தேக்கி நீரில் சாக்கடைகள், சாயவிஷகழிவுகள் கலவரத்தினால் நோய்வாய்ப்பட்டு பட்டு மடியும் தாவரங்கள் உயிரினங்கள், அசமந்து போக்கினால் பூலோகம் சஞ்சலமாவதோ? நீர்நிலைகள் விஷமேறி துன்பியல் நோய்நொடி கண்டு உயிர்காவு கொள்ளுதே. எங்கள் கடமை பசுமை புரட்சி. சுத்தநீர் பேணிட திடசங்கற்பம் கொள்வாயடா!

சேர்ந்த கழிவுகளை அகற்றும் தொண்டர்கள் சுமையில் எங்கள் பங்கேதடா! கடல் உயிரினங்கள் தவிப்பில் பாவச்சுமை பாரடா? கழிவில் சிக்கிய ஆமைகள் திமிங்கிலம் மனிதகுல நாசங்களே தாளங்களே, விஷ நீரால் மடியும் கடல்வாழ் செல்வங்கள் கரை ஒதுங்குவது ஏனடா மனிதா பாரடா

தெரிந்தும் தெரியாமல், புரிந்தும் புரியாமல் பாழாவதோ? மாண்புமிகு மனிதநேயம் வாழ்வாதாரம் பரிசுத்த நீரில் உங்கள் சிறப்பாய் தாருங்களேன்

அன்னை பூமி பூரிக்க வையகத்துள் வாழ்வோமடா. விழித்துக்கொள்வாய் என்னென்ன மாந்தர்களே. மழை நீரை தேக்கி நீர்கழிவுகளை அகற்றி, பசுமை செய்வோமடா,

– தியாகராஜா யேகேஸ்வரன் (ஓமானிலிருந்து).

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading