கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

04.10.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -194

“கலை மகளே”

கல்வியின் அதிபதி கலைகளின் நாயகி
செல்வத்துள் செல்வம் சிந்தைதரும் சரசுவதியே
வெள்ளைத் தாமரை வீற்றிருந்து கற்றோர்
உள்ளக் கோவிலில் குடியிருக்கும் கலைமாமணியே/

மழலை மனதில் மதியினைப் பதித்து
அழகுதமிழில்அறிவைத்தரும் ஞானதேவியே
வீணைஉந்தன் சேயாய் விரல்களில் தவழும்
ஆணையிட்டே மீட்பாயே அழகுதமிழில் இசைவாணியே /

அஞ்ஞானம் விஞ்ஞானம்அஞ்சாத மெய்ஞானம்
எஞ்ஞானமாயினும் அறிவாயுதம் எடுத்தாலும்
அட்சயதேவியே

சரசுவதியே சரணம் சரணமம்மா-உந்தன்
சந்நிதி தொழுதிடல் சாலச்சிறந்த வரமேயம்மா /
நன்றி வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan