திருமதி.அபிராமி கவிதாசன்.

28.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -212
தலைப்பு !
“மொழி”
உள்ளத்தோன்றலை உதிர்க்கும் மொழியே
உலக நட்பை உருவாக்கிய மொழியே //

வெள்ளை மனதினில் விளைந்த மொழியே
வள்ளல் பாரியாய் வளர்ந்த மொழியே //

துள்ளல் நடையிட துணிவுதரும் மொழியே
துயிலுறும் இறப்பிலும் தன்பிரிய மொழியே//

எள்ளளவும் பிரியா என்நாட்டு மொழியே
எத்திக்கும் தித்திக்கும் எழில்மிகு மொழியே//

நன்றி வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading