திருமதி .கலாதேவி பத்மநாதன்.

28.02.2023.
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவி வாரம் -212
தலைப்பு !
“ மொழி “

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்

என்பதாலோ என்னவோ என் மொழி என்னுள் நிரந்தரமில்லை …

நானறிந்து பயின்றமொழி என்தாய் மொழி– தமிழ்…

நாளடைவில் நட்பு கொண்டு அறிந்த
அந்நிய மொழி– ஆங்கிலம் ..

கற்பிக்க சென்ற இடம் எனக்கு கற்பித்த பாரத மொழி– ஹிந்தி ..

அன்னை தந்தை அவ்வப்போது உறையாடக் கேட்டறிந்த மொழி _ சிங்களம்..

இத்துனை இருந்தும்
ஏனோநான் இரவல் மொழி …

நிரந்தரமில்லா என் இருப்பிடமொழி எதுவோ…..

ஈழத் தாயக பிரசை நான்
இந்திய தமிழகத்தின் அகதி நான்

நன்றிகள் . பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading