திருமதி செ. தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம்!
பாவையண்ணா, கமலாக்கா.
தலைப்பு :- பிறந்த மனை
“”””””””””””””””””””””

அதுவோர் காலம் அன்பெனும் மரக்கலம்
புதுமை காட்டிப் பொற்புடன் அசைந்தது
மரக்கால் முன்றில் மண்மணத் துறவுகள்
இரக்கம் ஈகை எண்ணரும் புகழெனச்
சிறக்கும் வேகச் சீரிய பிணைப்பினால்
உறக்கம் தாண்டி உன்னத உழைப்பையும்
தனக்காய்த் தேடாத் தாய்மையின் சுரப்புடன்
சினத்தை வெல்லும் செம்மைகொள் குணத்துடன்
மனத்தை நோகா மாண்புடை நடத்தைகள்
கறவை மாடும் காண்பரும் இயற்கையும்
சிறகில் தேடல் செல்வழி அழகியல்
சிறுகூழ் உண்ண சேர்ந்திடும் உறவுகள்
நறுந்தார்ப் பூவாய் நல்லுளத் தயலவர்
இறுமாந் தாளும் என்னரும் சகோதரர்
எனவுளம் பொங்கும் இன்னருள் உதித்திடும்
செறுநர் காணாச் செய்பொழில் எனதகம்
உறுமோர் உள்சுகம் ஒண்பொருள் அறிவிரோ
அருமைத் தாயார் அன்பகம் அளிசுகம்
பெருமை அன்றோ பேசிடக் குறையிலேன்!

குறிப்பு:-

ஆயினும்
தயவாம் தாயும் தம்பியர் மறைவினால்
அயன்றார் ஆழ்ந்தார் ஆழ்மனம் நொருங்கவே
இருப்பில் இங்கோர் ஏதிலி முறைமையால்
திருப்பம் எங்கே தேடுதல் அகற்றினர்
அருமை வாழ்க்கை ஆழ்கடல் அலைகளில்
பெருமை பொய்த்துப் பேதைமை கலந்ததால்
உறங்கா உள்ளம் ஓம்பிய மனிதரை
மறக்கா தேங்கி மாயையென்(று) உணர்ந்தனே!

திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading