புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 156

தலைப்பு — இலக்கு

நல்லதையே நினைத்து நம்பிக்கையுடன் உழைத்து
நல்லுயர்நிலை இலக்கை நாட்டிடின் ஆங்கு
செல்வமாய் பெரும்புகழ் சேர்வதோடு வருவரது
வல்லவரென்ற நற்பெயரும் வாழும் நீடு!

அழுக்காய் மோசடிகள் ஊழலுடன் இணைந்திருக்க
பழுத்ததும் மற்றதும் அழுக்குள் விழமுயற்சிக்க
அழுக்கை அகற்றிடும் இலக்குடன் துணிந்து
முழுமனதுடன் முயற்சித்தால் முளைத்திடும் நற்சூழல்.

மனதைச் சுத்தமாய் மகிழ்வுடன் வைத்து
பணத்துக்காய் நேர்மையை பயிரிடாது பாதுகாத்து
உணர்ந்து மரியாதையுடன் அனைவரையும் மதித்து
அன்புகாட்டி ஆதரவளித்தால் உதயமாகும் நல்லமைதி.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
03/01/2022

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading