நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

திரேஸ் மரியதாஸ்


🌺உன்னைத்தேடித்தேடி
கண்ணை மூடினேனே🌺

கண்ணாய் வளர்த்த உன்னைக் காண நாளும் பெண்ணாய்த் திரிந்தேனே
மண்ணிலெங்கும் தண்ணியுமில்லாமலே

அங்க அநுராதபுரத்தில இருக்கிறாய்
இங்க உகண்டாவில்
என இணையத்தில கேட்டு
இருதயமுடைந்து இளைத்தேனே
உங்களையும்
ஒரு அம்மாதானே
ஈன்றெடுத்தாளென இம்மியளவும்
இன்றும் நினைக்கிறீர்கள் இல்லையே என்றேங்கி இடிவிழுந்தாற்போல

அலைந்து உலைந்து அந்த அரசியல்வாதி
இந்த அப்புக்காத்து என உடலும்
உள்ளமும் உருக்குலைந்து
உயிரற்ற உடலாய்
ஊர்வலம் நடக்குது

உன்னை அங்க வந்தாலாவது
பார்க்கலாமென ஆண்டவன்
அழைத்திட்டானோ அம்மா இனி அலைக்கழிந்து அலைந்தது போதுமென
அழைப்புக் கடிதம் தந்தானோ(ளோ)
உன்னைக் காணக் கண்ணையாவது மூடி
நாடித்தேடி ஓடிவந்து முத்தமிட
வேடிக்கையான உலகத்தால
ஆக்கம்-திரேஸ் மரியதாஸ்

Nada Mohan
Author: Nada Mohan