10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
தீதும் நன்றும்
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1983..!
“தீதும் நன்றும்”
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
வார்த்தளித்த செம்மல்
கணிகன் பூங்குன்றனார்
வடித்த சங்கப் பா எழில்
சந்தம் மட்டுமல்ல சரித்திரப் பா
உலகெங்கும் வாழ்பவர்
உறவென்றார் பாரீர்
வரு துன்பம் இன்பம்
நம்மாலே நமக்கென்றார்
எத்தனை அரிய பொருளை
அன்றே தந்து சென்றார்..
உணர்ந்தோமா நாமிங்கு
உளறித் திரிந்து உரிமை
கொண்டு
நம்மை நாமே அழித்தொழிக்கிறோம்
அடுத்தவர் மீதினில் பழியைப்
போட்டே தப்பிக்க நிணைத்து
தடம் மாறிப் பாதாளம்
சேர்கிறோம் இலக்கின்றி..
செய்கருமம் சேர்ந்தொழுகல்
சேவை மனப்பாங்கு யாவும்
நன்மை தரு வழி நடந்திட
வந்தேகும் வளமும் வனப்பும்
வழி கிட்டும் வலி போக்கும்
தடை என்ன மனமே நீயும்
உடைத்துவிடு தீதினை
உய்த்துவிடு வாழ்வினில்..
சிவதர்சனி இராகவன்
22/5/2024

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...