தூசோடு மாசும்

ராணி சம்பந்தர்

தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி, குரலுமே வராது
பசை போல் ஒட்டி ஒட்டியே முட்டிய
கண்ணீர் வடிந்து வடிந்தும் ஓடுமே

மாசு படிந்தத புவியின் போராலே
காற்றலையில் காவி பிடித்த கறை
முறையாகப் போராடிக் களைத்ததே
பறை சாற்றும் எரிமலைப் பாறையே
உறைந்துருகிய நெருப்புக் குழம்பே

பூசி மெழுகியே ஊர் ஊராகப் பரவிட
தூசியும் மாசாகப் பறந்து வந்திடவே
மூசி மூசி வசிக்கும் மானிடர் மூழ்கிய
நோயில் புலம்பலோடு புலம்பலாகுதே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

Continue reading