மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

தேவ கஜன்

நிலாவில் உலா

உன்னோடு நானிருந்த
நினைவை சுமந்தபடி
நிலாவில் உலாச்சென்றேன்
நிஜத்தில் ஒரு முறையாவது
மீண்டும் உனை கண்டு
களிப்புற மாட்டேனோ
என்ற நப்பாசையோடு
அங்கும் எனக்கு ஏமாற்றமே!

நிலா முளுவதும் தேடியும்
என் நெச்சத்தில்
பதிந்து கிடக்கும்
உன் முளுமதி முகத்தை
காணாத ஏமாற்றத்தோடு
கதிகலங்கி விட்டேன்.
காணாத தேசத்தில் நீ!
ஒளிந்திருந்து என்னை
கண்காணித்தது போதும்
கண்முன்னே வா!
காலம் முளுவதும்
உன் கைக்குள்ளே
என் வாழ்வை கடந்திடணும்.

எத்தனை வலிகளை
கடந்தவள் நீ!
அத்தனை வலிகளும்
ஆறும் முன்னே
ஆயுள் முடிந்தவளே!
எனதாயுள் நீட்சியிலும்
நிலைத்தேயிருப்பாய் நீ!

உன் ஒற்றை அன்பிலே
உச்சமான மகிழ்வை
பெற்றவன் நான்
மிச்சமான என் வாழ்வின்
மகிழ்தலுக்காய் நீ காட்டிவிட்டு
சென்ற அன்பை
நினைவில் சேமித்து
என் வலிகளுக்கு மருந்தாக
மீண்டு தடவிக்கொண்டு
ஆறிக் கடக்கின்றேன் வாழ்வை.

எனக்கு சோறூட்ட
நீ காட்டி கதை சொன்ன
நிலாவும் நீழ்வானத்தில்
இன்றும் உலாவிக்கொண்டிருக்க
உன் உலாவல் மட்டும்
அன்றோடு முடிந்ததேன்.
நிலாவை பார்கும் பொழுதுகள்
என் நிலைகளை இழக்கின்றேன்
உன் நிழலினை தேடுகின்றேன்.
அம்மா! அம்மா! அம்மா!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading