தொலைத்தொடர்பும் போராட்டமும்

சிவருபன் சர்வேஸ்வரி

தொலைத்தொடர்பும் போராட்டமும்

அடியே பாக்கியம் கேட்டுக்கோ சங்கதி//
இதுவொன்னு கையிலை வந்து உறக்கமில்லையடி //
நேரத்துக்கு நேரம் அழைப்பும் வரும்பார் //
அவசரமாக வெளிக்கிட ஆக்கினையும் செய்யுமடி//

உம்புட்டும் இல்லையடி நல்லதும் செய்யுமடி //
நாடுபூரவும் கவித்தளம் பாரு புள்ள//
அதிலை மழைபோலவே கவிதைகள் எழும்புள்ள //
சும்மா சொல்லக்கூடாது பெண்ணே //
எம்மையும் அறிமுகப் படுத்திய சீமாட்டியுமவளே //

எத்தனை இடத்தில் நம்ம குரலை அழைத்தும் செல்லுதே //
அம்புட்டு இரகசியம் இதுக்குள்ளே இருக்குதடி//

போராடி நின்றாலும் புகழாரம் கொட்டுதே தங்கம் //
புள்ளை செய்வானோ போவுனக்கு விசரென்பான் //
சொல்லும் சொல்லையும் தவறாமல் செய்யுதே கண்ணே//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading