நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

3.3.22 வியாழன் கவி

விடியலில் உன்னதம் 181.

வெவ்வானம் விழி திறந்து
போர்வையை நீக்கி
காரினை விலக்கி
பரியில் ஏறி பகலவன் பவனி
விடியலுக்காய் விரைந்திடு

ஆவினம் ஆர்பரிக்க
புல்லினம் இசைத்திட
வண்டினம் ரீங்காரம் செய்ய
மலர்கள் இதழ் விரித்து
மணம் பரப்ப
பகலவன் செவ்வானில்
பவனிவர
விடியலின் வரவுக்காய்
உழவனும் ஏருடன் வயல் செல்ல
கூரையில் சேவல் கூவ
கோயில் மணி கேட்டதும்
அம்மா குளித்து இறைவனை
வணங்கி கடமைகளை செய்ய.

இனபேதமின்றி குழப்பங்கள் தீர
இனவெறியரின்
உக்கிர போரை நிறுத்தி
குறைகளை களைந்து விடியலில் உன்னதம் மகிழ்ந்திட
இறைவா இறைஞ்சி
துதிக்கிறோம் .

Nada Mohan
Author: Nada Mohan